முகில் திரை

யத்ர அம்ஷுகாக்‌ஷேப விலஜ்ஜிதானாம்
          யத்ருச்சயா கிம்புருஷாங்கனானாம்|
தரீக்ருஹ த்வாரவிலம்பி பிம்பாஹா
          திரஸ்கரிண்யோ ஜலதா பவந்தி|| 14

ஆடை அவிழ்ந்து அங்குளம் நானும்
பாடும் கின்னரப் பாவையர் தமக்கு
நாடா பொழுதில் நல்குகை வாயில்
மூடி உதவும் முகிலது திரையாய்.


அருஞ்சொற்பொருள்:
அங்குளம் - அங்கு+உளம், உளம் - உள்ளம் (இடைகுறைந்து நின்றது),
நாடா பொழுது - எதிர்பாராதா பொழுது, ‘யத்ருச்சயா’ (’எதேச்சை’ என்று தமிழில் தத்பவமாய் வழங்குகிறது),
முகில் - மேகம், ‘ஜலதா’.

குகைகளாம் வீட்டில் காதலனுடன் இருக்கையில், அவன் தன் ஆடையைப் பறித்துவிட, நாணம் அடையும் கின்னரப் பெண்ணிற்கு அங்கே தாழும் மேகம் திரையாய் விளங்கி அவள் நாணம் அடையத் தேவையில்லாதவாறு செய்கிறது. இடைஞ்சலின்றி புணர்ச்சி எய்தினர் காதலர் என்றவாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக