அடிவுழல் ஆதவன்

ஸப்தர்ஷி ஹஸ்தாவசித அவஷேஷாணி
          யதோ விவஸ்வான் பரிவர்தமானஹ|
பத்மானி யஸ்ய அகரஸரோருஹாணி
          ப்ரவோதயதி உர்த்பமுகைர்மயூகைஹீ|| 16

பதியேழ் முனிவர் பறித்தபின் மிஞ்சும்
சிகரச் சுனைவளர் செந்தா மரைப்போ(து)
அதனை அடிவுழல் ஆதவன் தன்மேல்
முகஞ்செல் கதிர்களால் முகிழ்ந்திடச் செய்வன்.


அருஞ்சொற்பொருள்:
ஏழ் முனிவர் - சப்த ரிஷிகள்,
போது - மொட்டு,
அடிவுழல் - அடி+உழல் - இமாலயத்தின் சிகரத்திற்குக் கீழே சுற்றி வரும் (ஆதவன்),
முகிழ்தல் - மலர்தல்.

இமாலயத்தின் உச்சிகளில் உள்ள சுனைகளில் வளர்ந்துள்ள தாமரை மொட்டுகளில் சிலவற்றைச் சப்தரிஷிகள் தங்கள் வழிபாட்டிற்காய்ப் பறித்துச் செல்கின்றனர். எஞ்சியவை கீழே சுற்றும் சூரியனின் மேல்நோக்கிச் செல்லும் கதிர்களால் மலர்விக்கப்படுகின்றன.

சூரியனின் மேல்நோக்கு கதிர்களால் இமய உச்சியில் உள்ள தாமரை மலரும் என்றது இமாலயம் மிக உயர்ந்தது என்னும் குறிப்புடையது. உயர்வுநவிற்சி.

1 கருத்து:

  1. அருமை. அருமை. நல்வாழ்த்துக்கள். தங்கள் தமிழ்ப்பணி தொடரவேண்டும். குமாரசம்பவத்தை புத்தகமாக வெளியிட வேண்டும் மற்றும் ஆவணப்படுத்தவேண்டும்.

    வா.வே. சு பகவான் ரமணரிடம் இவ்வாறு கூறினார்.

    வா.வே. சு.- ""நானோ ஓலைச்சுவடிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன், இங்கிருப்பவர்கள் ஆன்மீகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்"
    பாகவான் ரமணர் பின்வருமாறு மொழிந்தார்.
    "தமிழ்ப்பற்றையும், சிவப்பற்றையும்" யாரய்யா விடச்சொன்னார்கள்"

    தமிழ்ப்பணியும் தெய்வப்பணியும் வேறல்ல.
    நன்றி.

    பதிலளிநீக்கு