நமைச்சலும் நறுமணமும்

கபோலகண்டூஹூ கரிபிஹி வினேதும்
          விகத்திதானாம் ஸ்ரலத்ருமாணாம்|
யத்ர ஸ்ருதக்‌ஷீரதயா ப்ரஸூதஹ
          ஸாநூநி கந்தஹ ஸுரபீ கரோதி|| 9
   
காட்டில் அலைமா மதகரி
          கன்னம் உற்றத் தினவினைப்
போக்கிக் கொள்ள உரசிட
          புடையில் தேவ தருவதன்
போர்த்து பட்டை பேர்ந்துபல்
          பொளிகள் தோன்ற அதனிடை
ஊற்றும் பாலின் நறுமணம்
          ஓங்கிச் சிகரம் கமழுமால்.


அருஞ்சொற்பொருள்:
மாமதகரி - பெரிய மதங்கொண்ட யானை,
தினவு - நமைச்சல், அரிப்பு,
புடை - பக்கம் - ‘தினவினைப் போக்கிக் கொள்ள தேவதருவதன் புடையில் உரசிட’ எனக் கூட்டுக,
பொளிகள் - பிளவுகள், கீறல்கள்,
பால் - மரத்தின் பால் (பிசின்),
கமழும் - மணம் பரப்பும்.

இதனால் இமயத்தில் எப்பொழுதும் நறுமணம் கமழும் என்று குறிப்பிடுகிறார் கவி. யானை கன்னத்தினவை போக்கத் தேவதாரு மரத்தில் உரசிக்கொள்வது எத்துணை வியக்க வைக்கும் (அஞ்சவும் வைக்கும்) காட்சி, கண்டீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக