இமாலயத் தென்றல்

பாகீரதீ நிர்ஜர ஷீகராணாம்
          வோடா முஹுஹு கம்பித தேவதாருஹு|
யத்வாயுரன்விஷ்ட ம்ருகைஹீ கிராதைர்
          ஆஸேவ்யதே பின்னஷிகண்டிபர்ஹஹ|| 15

பாகீ ரதியின் படர்திரை ஏந்தி
ஊடித் தேவ தருக்கள் உலுக்கி
தோகை கலைத்துத் தொடுகிற காற்றை
வேடுவர் துய்ப்பர் வேட்டிய களைப்பில்.


அருஞ்சொற்பொருள்:
பாகீரதி - கங்கை நதி, பகீரதனால் கொண்டுவரப்பட்டதால் ‘பாகீரதி’ எனப் பெயரிற்று,
படர்திரை - வினைத்தொகை, திரை - அலை/ திவலை,
வேட்டிய களைப்பு - வேட்டையாடிய களைப்பு.

கங்கையின் நீர்த்திவலைகளை ஏந்தியதால் குளிர்ச்சியாயும், தேவதாருவினை உலுக்கியதால் நறுமணம் உடையதாயும், மயிற்றோகையைக் கலைத்ததால் தூயதாய் மென்மையாயும் விளங்கியது ஹிமாலயக் காற்று. அதனை விலங்குகளைத் தேடி அலைந்து களைத்திருந்த வேடுவர் துய்த்து (அனுபவித்து) மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக