மேனையை மணந்தான்

ஸ மானஸீம் மேருஸகஹ பித்ரூணாம்
          கன்யாம் குலஸ்ய ஸ்திதயே ஸ்திதிஜ்ஞஹ|
மேனாம் முனீனாமபி மானனீயாம்
          ஆத்மானுருபாம் விதினா உபயேமே|| 18

மேருவின் தோழன் மேநூல்கள் கற்றோன்
ஏருடை பிதுரு ஏற்றமனப் பெண்ணாம்
சீருடை முனிவரும் சிறப்பிக்கும் மேனையைச்
சேர்குலம் நிலைக்கச் சேர்ந்தனன்நன் முறையில்.


அருஞ்சொற்பொருள்:
மேநூல்கள் - மேலான நூல்கள், சாஸ்திரங்கள்,
ஏருடை - சிறப்புடை,
பிதுரு - ‘பித்ரு’ - பித்ருக்கள் என்பவர் ஓர் தேவ வகையினர். அவர்கள் ஏழு தொகுதிகளாய் இருப்பவர், அவருள் அக்னிஷ்வாத்தர் என்ற தொகுதியினருக்கு மானசீக மகளாய் விளங்கியவள் ‘மேனை’,
சேர்ந்தனன் - திருமணத்தில் இணைந்தான் (இமவான்),
நன்முறையில் - சாத்திர முறைப்படி, ‘விதினா’.

மேருவின் தோழனும், சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவனுமான ஹிமவான், தன் குலம் நிலைக்க மேனை என்பவளை மணந்து கொண்டான். (’மேனை’யை ‘மேனகை’யோடு குழப்பிக்கொள்ள வேண்டா!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக