மலையரசெனும் மாண்பு

யஜ்ஞாங்க யோனித்வமவேக்‌ஷ்ய யஸ்ய
          ஸாரம் தரித்ரீதரணச்ஷமம் ச|
ப்ரஜாபதிஹி கல்பிதயஜ்ஞபாகம்
          ஷைலாதிபத்யம் ஸ்வயமன்வதிஷ்தத்|| 17

உலகைத் தாங்கிட உறுவலி யும்வேள்விப்
பொருள்கள் தோற்றிடும் பொற்பதும் தான்கண்டு
மலைகட்(கு) அரசெனும் மாண்புடன் வேள்வியினில்
தருமவிர் ஏற்றலும் தந்தனன் அயன்தானாய்.


அருஞ்சொற்பொருள்:
உறுவலி - வினைத்தொகை, வலி - வலிமை,
பொற்பு - இயல்பு,
வேள்விப் பொருள்கள் தோற்றிடும் பொற்பு - யாகத்திற்குத் தேவையான பொருள்களை உருவாக்கித் தரும் இயல்பு, ‘யஜ்ஞாங்க யோனித்வம்’,
தருமவிர் - (வேள்வியில்) தரப்படும் அவிர், ‘ஹவிஸ்’,
அயன் - பிரம்மா (’ப்ரஜாபதி’).

பூதர’ என்ற சொல் மலையைக் குறிப்பது, ‘உலகைத் தாங்குவது’ என்று பொருள். உலகைத் தாங்கும் வலிமையையும், வேள்விக்கு உரிய சோமலதை, தேவதாரு போன்ற பொருட்களைத் தோற்றுவிக்கும் இயல்பையும் கண்டு பிரம்மதேவன் தானாக முன்வந்து இமாலயத்திற்கு ’மலைகளின் அரசன்’ என்ற பதவியை அளித்தான். இதனால் இமாலயம் ஆகிய தேவன் யாகத்தில் ’அவிர்’ ஏற்கும் உரிமையையும் பெற்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக