அங்கம் அற்றோன் துறைமடல்கள்

ந்யஸ்தாக்‌ஷரா தாதுரஸேந யத்ர
          பூர்ஜத்வ்சஹ குஞ்ஜார பிந்துஷோணாஹா|
வ்ரஜந்தி வித்யாதர ஸுந்தரீணாம்
          அநங்க லேக்க க்ரியயா உபயோகம் || 7

அங்கே தூள்சேர் நீர்கொண்டு
          அழகிய வித்யா தரமகளிர்
அங்கம் அற்றோன் துறைமடல்கள்
          ஆருயிர் துணைவர்க்(கு) எழுதுவதால்
தந்தம் சேர்மால் யானைஉடல்
          தன்னை ஓக்கும் நிலைக்கண்டு
வெந்த சாம்பல் நிறபூர்ஜ
          விருட்சப் பட்டை பயனெய்தும்.


அருஞ்சொற்பொருள்:
தூள்சேர்நீர் - செங்காவிப்பொடி கலந்த நீர், இது எழுத மையாகப் பயன்பட்டது,
அங்கம் அற்றோன் துறை மடல் - காதல் கடிதம்,
அங்கம் அற்றோன் - மன்மதன் (’அநங்கன்’),
பூர்ஜம் - ஒரு வகை மறம் (Birch Tree), இதன் பட்டையை எழுதப் பயன்படுத்துவர்.


செந்நிற எழுத்துக்கள் கொண்ட வெளிறிய பூர்ஜப் பட்டை புள்ளிகள் கொண்ட யானையின் தோலை ஒத்தது. வித்யாதரப் பெண்களால் அவர்களது காதலர்க்குக் கடிதம் எழுதப்பெறுவதால் பூர்ஜப் பட்டைகள் பயன் எய்துகின்றன என்று நயப்புடன் உரைக்கிறார் காளிதாசர்.

இமாலயத்தில் பலவகையான தேவ சாதியினர் வசிக்கின்றனர். அவர்களில் வித்யாதரரை இங்கே குறிப்பிடுகிறார் கவி. முன் பாடல்களில் அப்சரஸ்கள், சித்தர்கள், வேடுவர்கள் குறிக்கப்பட்டதைக் காண்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக